;
Athirady Tamil News

புதிய மாற்றம்.. 60 ஆண்டுகளில் முதல் முறையாக லட்சினையை மாற்றுகிறது நோக்கியா..!!

0

நோக்கிய நிறுவனம் 60 ஆண்டுகளில் முதல் முறையாக தனது லட்சினையை முற்றிலும் வேறு விதத்தில் மாற்றியுள்ளது. பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம், உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வந்தது. 80, 90களில் பிறந்தவர்கள் நோக்கியா செல்போன் பயன்படுத்தாதவர்களாக இருக்க முடியாது. ஸ்மார்ட் போன்கள் வருகை அதிகரித்த நிலையில் சீனா, ஜப்பான் நிறுவனங்களுடன் போட்டிபோட இயலாமல் நோக்கியா நிறுவனம் பின்னடைவை சந்தித்து. இந்நிலையில் மீண்டும் சந்தையை பிடிக்கும் வகையில் நோக்கியா களம் இறங்கியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் நடைபெறும் எம்டபிள்யூசி 2023 (MWC 2023) கண்காட்சியின் அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்கு முன்னதாக நோக்கியா நிறுவனம் தனது பிராண்டின் புதிய லோகோ அறிமுகப்படுத்தியது. தனது அடையாளமாக உள்ள ஊதா நிறத்தை கைவிடும் அந்த நிறுவனம் நோக்கியாவுக்கான ஆங்கில எழுத்துக்களை 5 விதமாக வடிவமைத்து பல வண்ணங்களையும் பயன்படுத்தியுள்ளது. இந்த புதிய லோகோ இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் மிகவும் நவீனமானது ஆகும்.

இதையடுத்து நாங்கள் எங்கள் யுக்திகளை புதுப்பித்து வருகிறோம், மேலும் இன்று நாங்கள் யார் என்பதை பிரதிபலிக்கும் வகையில் எங்கள் பிராண்டையும் மேம்படுத்துகிறோம் என்று நோக்கியா கார்ப்பரேஷனின் தலைவர் பெக்கா லண்ட்மார்க் கூறினார். பெரும்பாலான மக்களின் மனதில் நாங்கள் இன்னும் ஒரு வெற்றிகரமான மொபைல் ஃபோன் பிராண்டாக இருக்கிறோம். ஆனால், நாங்கள் நெட்வொர்க்குகள் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கலில் கவனம் செலுத்தும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். இது வழக்கமாக பயன்படுத்தப்பட்டுவரும் மொபைல் போன்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.