;
Athirady Tamil News

மீண்டும் அடாவடி: அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா !!

0

இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தை சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனை இருக்கிறது. மேலும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதலும் ஏற்பட்டது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் சீனா மீண்டும் அடாவடியில் ஈடுபட்டுள்ளது. அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சீன, திபெத்திய மற்றும் பின்யின் ஆசிய மொழிகளில் சீனாவின் சீவிஸ் விவகார அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்தில் உள்ள இரண்டு நிலப்பகுதிகள் இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள் இரண்டு ஆறுகள் ஆகியவற்றின் பெயர்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள நிர்வாக மாவட்டங்களின் வகையையும் பட்டியலிட்டுள்ளது. இந்த இடங்கள் திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் மக்களுக்கு மிக வசதியாகவும் துல்லியமாக நினைவில் வைத்து கொள்ளவும், அடையாளம் காணவும் உதவும் என்று சீனா தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு திபெத்திய பகுதிகளின் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகள் இருந்தும் வரை படத்தையும் சீனா வெளியிட்டுள்ளதாக இதில் அருணாசல பிரதேச தலைநகர் இட்ட நகருக்கு அருகில் உள்ள ஒரு நகரமும் அடங்கும்.

அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயர்களை சூட்டுவது இது 3-வது முறையாகும். கடந்த 2017-ம் ஆண்டு 6 இடங்களுக்கு 2021-ம் ஆண்டு 15 இடங்களுக்கு பெயர்களை மாற்றி அறிவித்து இருந்தது. இதனை நிராகரித்த இந்தியா தனது கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தான் அருணாசல பிரதேச விவகாரத்தில் சீனா மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, ‘எதார்த்தத்தை மாற்றாத பெயர்களை சீனா கண்டுபிடித்து வருகிறது. இதுபோன்ற செய்திகளை நாங்கள் பார்த்தோம். இது போன்ற முயச்சியை சீனா மேற்கொள்வது முதல் முறை அல்ல. இதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது. இருந்து வருகிறது. தொடர்ந்து இருக்கும். சீனாவால் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை வழங்க முயற்சிப்பது உண்மையை மாற்றாது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.