;
Athirady Tamil News

புட்டினின் இறுதி வாழ்நாள் மோசமானதாக அமையும் – ஜெலென்ஸ்கி !!

0

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது வாழ்நாள் முழுவதையும் இருண்ட அடித்தளத்தில் கழிப்பார் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் 200 சதுர மீற்றர் அளவிலான பாடசாலையின் அடித்தளத்தில் யாஹிட்னேயின் கிட்டத்தட்ட 367 மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

அதில் 18 மாத குழந்தை உட்பட, கிராமவாசிகள் ஒருமாத காலம் அங்கு வைக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த மக்களில் உயிர் பிழைத்த ஒருவர் கூறும்போது, சிறிய பாதாள அறையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சிலர் இறந்ததாக தெரிவித்தார்.

இந்த நிலையில் உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜேர்மன் துணை அதிபர் ராபர்ட் ஹேபெக்-வுடன் யாஹிட்னேவிற்கு சென்றார்.

அங்கு பாடசாலை அடித்தளத்தில் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது பேசிய ஜெலென்ஸ்கி,

‘இதை எல்லாம் பார்த்த பிறகு, ரஷ்யாவின் அதிபர் தனது மீதமுள்ள நாட்களை கழிப்பறைக்கான வாளியுடன், ஒரு அடித்தளத்தில் கழிப்பார் என்று நான் நம்புகிறேன்’ என தெரிவித்தார்.

அதேபோல் ஜேர்மன் துணை அதிபர் கூறுகையில்,

‘அவர்கள் வெற்றி பெறுவார்கள், அவர்கள் மீண்டும் கட்டமைக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

அவசர காலத்தில் அவர்களை ஆதரிப்பதில் மட்டுமல்ல, உக்ரைனுக்கு பொருளாதார ரீதியாகவும் ஆதரவு உள்ளது என்ற தெளிவான சமிக்ஞையை அனுப்புவதற்காகவே இந்தப் பயணம் அமைந்துள்ளது’ என கூறினார்.

கீவ் அதிகாரிகளும், மேற்கத்திய அரசாங்கங்களும் ரஷ்யப் படைகள் உக்ரைனில் பல குற்றங்களை செய்ததாகக் குற்றம்சாட்டின. ஆனால் அவற்றை மாஸ்கோ மறுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.