;
Athirady Tamil News

மருமகளை கொன்றுவிட்டு தியேட்டரில் படம் பார்த்த மாமனார்- இருசக்கர வாகனத்தை வைத்து போலீசார் மடக்கினர்!!

0

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே உள்ள இட்டேரியை கேபிரியல்நகரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது30). ராணுவ வீரர். இவரது மனைவி முத்துமாரி (26). கடந்த 7-ந்தேதி முத்துமாரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த தமிழரசனின் தந்தை தங்கராஜூக்கும், முத்து மாரிக்கும் இடையே நிலம் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், கடப்பாறையால் முத்துமாரியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி 8-ந்தேதி உயிரிழந்தார். தங்கராஜூவை கைது செய்யும் வரை முத்து மாரியின் உடலை வாங்க மாட்டோம் என கூறி கடந்த 2 நாட்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் தங்கராஜை தேடி வந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவர் வாக்குமூலத்தில் கூறியதாவது:- தமிழரசன் எனது பெயருக்கு பணம் அனுப்பி இட்டேரியில் 12 சென்ட் நிலத்தை முத்துமாரி பெயருக்கு வாங்க கூறினார். ஆனால் அந்த நிலத்தை எனது பெயருக்கு வாங்கினேன். பின்னர் விடுமுறையில் ஊருக்கு வந்த எனது மகனிடம் இது குறித்து முத்துமாரி புகார் கூறினார். இதனால் எனது மகனுக்கும், எனக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த முத்துமாரியிடம், நிலம் வாங்கியது தொடர்பாக ஏன் எனது மகனிடம் தூண்டிவிடுகிறாய் என கேட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் கடப்பாறையால் முத்துமாரியை தாக்கினேன். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். மருமகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தங்கராஜை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் எப்படி கைது சிக்கினார் என்ற விபரம் தெரியவந்துள்ளது. கடந்த 7-ந்தேதி முத்துமாரியை தாக்கியதும் அவர் பலத்த காயமடைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தங்கராஜ், தனது மருமகள் முத்துமாரியின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். இதற்கிடையே அரசு மருத்துவமனையில் முத்துமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து அவரை தேடி வந்தனர். தங்கராஜை ரெயில் நிலையம், பஸ்நிலையம், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தேடினர். இந்நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில், கொலை செய்யப்பட்ட முத்துமாரியின் இருசக்கர வாகனம் நின்றது. இதைத்தொடர்ந்து அந்த தியேட்டருக்குள் சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தங்கராஜ் படம் பார்த்து கொண்டிருந்தார். உடனடியாக அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.