;
Athirady Tamil News

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

0

2025 ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் முகவரிகளில், அனர்த்தங்கள் காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு அறியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 011 2784537 அல்லது 011 2788616 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தகவல்களை அறியப்படுத்த முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்களினால் வசிப்பிடத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, முன்னர் ஒதுக்கப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்திகள், முன்கூட்டியே பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அல்லது பாடசாலை அதிபருக்கோ அறியப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறான பரீட்சார்திகளுக்கு மாற்றுப் பரீட்சை மத்திய நிலையங்கள் ஒழுங்கு செய்யப்படவுள்ளன.

அத்துடன், பேரிடர் காரணமாக விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைகள் சேதமடைந்தாலோ அல்லது அழிக்கப்பட்டிருந்தாலோ, அந்த விடயங்கள் தொடர்பிலும் உடனடியாக அறிவித்துத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.