;
Athirady Tamil News

மரணப் பொறியாக மாறியுள்ளது !!

0

இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு நாட்டின் கல்வியை நவீனப்படுத்தாத அவலத்தை ஒரு நாடாக நாம் இன்று அனுபவித்து வருகிறோம் என்றும் இது ஒரு வகையில் கல்வியின் மரணப் பொறியாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஹொரவப்பொத்தானை வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் பிரபஞ்சம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

நாட்டின் கல்வியை புதுப்பிப்பிப்பதற்கும் நவீனத்துவ சூழலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தும் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி வகுத்துள்ளதாக தெரிவித்த அவர், உலகின் மிக நவீன மற்றும் மேம்பட்ட கல்விமுறைகளுடன் இதனை ஒப்பிட்டுப்பார்க்கலாம் என்றார்.

இந்நாட்டிலுள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடசாலைகளை ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவதே தமது ஒரேநோக்கமாகும் என்றும் இதற்காக மேற்கொள்ள முடியுமான சகலநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

எமது நாட்டில் பல பாகுபாடுகள் காணப்படுவதாகவும் மதங்கள், இனங்கள், பணக்காரர்கள், ஏழைகள், இயலுமையுள்ளவர்கள், இயலுமையற்றவர்கள் என பல்வேறு வகைகளில் பிரிந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.