;
Athirady Tamil News

சீனாவில் பட்டாசு கடை தீப்பிடித்து விபத்து- 4 பேர் உடல் சிதறி பலி!!

0

சீனாவின் ஹெபெய் மாகாணம் டச்செங் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. இதில், பட்டாசுகள் வெடித்து சிதறி அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.