;
Athirady Tamil News

2 பெண்களை விழுங்கிய திமிங்கலம்!!

0

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சென் லூயிஸ் ஒபிஸ்போ விரிகுடா கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த இரண்டு பெண்களை திமிங்கலம் ஒன்று விழுங்கிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் லூயிஸ் ஒபிஸ்போ விரிகுடா கடற்கரையில்(San Luis Obispo Bay) ஜூலி மக்சோர்லி (Julie McSorley) மற்றும் லிஸ் கோட்ரியல்(Liz Cottriel) ஆகியோர் கயாக்கிங் எனப்படும் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக திமிங்கலத்தின் உணவு உண்ணும் பகுதிக்குள் சென்ற பெண்களை திமிங்கலம் அப்படியே தனது பெரிய வாயால் அள்ளித் தூக்கியுள்ளது.

இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கயாக்கிங் விளையாட்டில் ஈடுபட்டு இருந்த நபர்கள் பலமாக கூச்சலிட்டனர்.

மேலும் இந்த காட்சிகளை அவர்களது ஒளிப்பட கருவிகளில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

திமிங்கலத்தின் வாய்க்குள் அகப்பட்டு அப்படியே தூக்கப்பட்ட இரண்டு பெண்களும் அதிர்ஷ்டவசமாக திமிங்கலத்தின் வயிற்றுக்குள் செல்லாமல் தவறி அதன் வாயிற்கு கீழாக உள்ள தண்ணீரில் முழ்கியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.