;
Athirady Tamil News

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் அபாயம்!

0

ஈரான் தாக்குதல் நடத்தியதால் அல்லது கடலில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் சிக்கியதாலோ ஹோர்முஸ் நீரிணையில் ஒரே இரவில் 7 எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து சேதமடைந்தன.

ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள் தாக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவத்தால், அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் மீளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலில் கடும் போட்டி நிறைந்த பிரதமர் தேர்தல் சில நாள்களில் நடைபெற்வுள்ள நிலையில், நெதன்யாகு தனது அதிகாரத்தை இழக்கு நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அடுத்த மாதம் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் நடைபெறவிருகிறது. அதற்கு முன்பே போர் காரணமாக விலை உயர்வுகள் ஏற்பட்டுள்ளது வாக்காளர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

இதனால் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் நடவடிக்கைகள் தொடர்பாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்கா தொடர்ந்து வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பளித்தால், அப்பகுதியிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைத் தாக்குவோம் எனத் தெரிவித்துள்ளனர். அந்தச் செய்தியில் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை.

இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி பெரியளவில் செய்திகள் வெளியாகாத நிலையில், சில கப்பல் நிறுவனங்கள் தாக்குதல்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க தயக்கம் காட்டுவதாக கடல்சார் கண்காணிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்கா போர் தொடர்பாக நடத்தும் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை ஈரான் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது.

ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கும் அதே நேரத்தில், தன்னை தற்காத்துக் கொள்வதிலும் தயாராக இருக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற இக்கட்டான சூழலில் எண்ணெய்க் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து கொண்டு வருவதில் இந்தியாவும் சிரமத்தை மேற்கொண்டு வருகிறது.

கடுமையான காலங்களுக்கு மத்தியில் எண்ணெய் டேங்கர்களை நகர்த்துவதற்கு ஹோர்முஸ் வழித்தடத்தைப் பயன்படுத்தும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு போர் மூண்டால் அது மேற்கு ஆசியப் பிராந்தியம் முழுவதும் உள்ள பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்தும். அதேநேரம் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரம் போன்றவற்றிற்கு உலகளவில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். இதனால், விலைவாசி மேலும் உயர வாய்ப்புள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.