;
Athirady Tamil News

சூடான் உள்நாட்டு போர் இன்னும் தீவிரமடையும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை!!

0

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவ அமைப்பான ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (Rapid Support Forces) இடையில் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையை நிறுத்துவதற்கான பல்வேறு ராஜதந்திர முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. எனவே, சூடான் முழு அளவிலான உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

சூடான் ராணுவத்தின் மிக முக்கியமான நட்பு நாடாகக் கருதப்படும் எகிப்தும், ஆர்.எஸ்.எஃப் அமைப்புடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகமோ இதுவரை ஒரு முக்கிய முடிவோ, சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் எந்த முயற்சியோ இதுவரை எடுக்கவில்லை. ராணுவம் மற்றும் ஆர்.எஸ்.எஃப் உடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட மக்கள் கட்சிகள் உட்பட சூடான் நாட்டு பிரதிநிதிகள் இன்று எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்டோம் பிராந்தியத்திற்கு தென்மேற்கில் உள்ள எல் ஓபீட் பகுதியிலும் மற்றும் தலைநகரின் தெற்கு பகுதியிலும் நேற்று ராணுவத்திற்கும், RSF-க்கும் இடையிலான மோதல்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்த முயற்சிகள் நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டார்ஃபர் நகரின் மேற்குப்பகுதி உட்பட சூடானின் பிற பகுதிகளிலும் வன்முறை வெடித்துள்ளது. சூடானின் தலைநகர் கார்டோமில், ஏப்ரல் 15 அன்று வெடித்த சண்டையின் விளைவாக சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். சூடானின் அண்டை நாடான சாட்வில் ஏற்கனவே உள்ள 7 முகாம்களில் 36,423 அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர் நடைபெற்று கொண்டு வரும் வன்முறை காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 2,45,000 அகதிகள் வருவதற்கு தயாராகி வருவதாக அகதிகளுக்கான ஐ.நா. ஆணையகம் (UN High Commissioner for Refugees) தெரிவித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் பதவி கவிழ்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.