;
Athirady Tamil News

காரைதீவில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை 42 வருட நினைவேந்தல்

0
video link-

1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலை மறக்க முடியாத வடுவாகும் – நினைவு நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன்

1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இனப் படுகொலை வடு
நினைவு நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன் வேதனை

1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலை மறக்க முடியாத வடுவாகும் என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார்.

கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 ஆவது வருடத்தை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை (23) மாலை காரைதீவில் நடைபெற்றது.

1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்சுரன் தலைமையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

இங்கு காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தவிசாளர் பாஸ்கரன் –

காரைதீவு எல்லையில் கறுப்பு ஜூலை 1983 ஆம் ஆண்டு மறக்கவும் முடியாத மன்னிக்கவும் முடியாத இந்த துயரான நாளானது 42 வருடங்களாக மறக்க வும் முடியாமல் காணப்படுகின்றது.

1983 ஜூலை 23 தொடக்கம் 30 காலப்பகுதியில் இனப்படுகொலை அதாவது தமிழினத்தின் படு கொலை மிகவும் கொடூரமாக காணப்பட்டது. அதாவது பேரின வாத சக்திகளால் இந்த கொடூரமான நிகழ்வு எங்களது இனப்படுகொலைஇ குறைந்தது அந்த காலகட்டத்தில் மூவாயிரம் பேர்இ இந்த இனப்படு கொலை செய்யப்பட்டதாக அறிந் துள்ளோம். இந்தவகையில் இந்த இனப்படுகொலைக்கு எதிராக நாங்கள் என கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் கோபிகாந்த்

காரைதீவு தமிழரசுக் கட்சியின் மூலமாக இந்தக் கறுப்பு ஜூலை 83 ஆம் ஆண்டு நிகழ்வானது எமது காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரினால் முன்னெடுக்கப்பட் டுள்ளது. இந்த நிகழ்வானது நாங் கள் அறிய இந்த இலங்கைத் திரு நாட்டிலே எங்களது இந்து சமயம் நான்கு புறத்தே ஆண்டஇ இந்த நாட்டிலே தமிழர்கள் பாரம்பரியம் உள்ள இந்த நாட்டிலே 83 ஆம் ஆண்டும் அதற்கு முதல் 58 ஆம் ஆண்டும் இதேபோல் ஒரு இனப் படுகொலை இடம் பெற்றிருந்தது.

அதேபோல் 77 ஆம் ஆண்டும் அந்தத் தொடர் இனப்படுகொலை யாக இடம்பெற்றிருந்தது. அதன் உக்கிரமாக 83 ஆம் ஆண்டு இந்தக் கறுப்பு ஜூலையானது நுவரெலியா அதாவது கண்டி மற்றும் கொழும் பிலே மிகவும் பார தூரமான நிலையிலேயே இடம்பெற்றிருந்தது. அன்றைய நாள் 83 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று வெறியாட்டத்தின் மூலமாக பல தமிழ் அப்பாவி இளைஞர்இ யுவதிகள்இ ஏன் குழந்தைகள் கூட எரியூட்டி தார் பரலின் போடப்பட்ட சம்பவமும் அன்று பதிவாயிருந்தது. அது ஒட்டுமொத்தமான தமிழினத்தை சிங்கள நாட்டிலிருந்து அழிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அன்று இடம் பெற்றிருந்தது. அதற்கு அன்றைய சிங்களதேச ஆட்சியாளர்களும் உடந்தையாக இருந்தனர் என்பதுதான் எங்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத வேதனையான நிகழ்வாக இருக்கின்றது.

இந்த நாட்டை சிங்கள நாடாக அறிவிக்க வேண்டும். சிங்களவர் மட்டுமே வாழ வேண்டும் என்றி ருந்த ஒரு காலகட்டத்திலே எங்க ளது உடமைகளும் உயிர்களும் சொத்துக்களும் பறிபோகப்பட்ட அந்த கறுப்பு ஜூலையை நாங்கள் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டிய வர்களாக இருக்கின்றோம்.

அதேபோல் அந்த கறுப்பு ஜூ லையை ஒத்ததாக தான் அண்மை யில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வாக இருக்கட்டும் ஏன் தம்பி பாலகுமாரன் இசைப்பிரியா போன்றவர்களது சாவும் கூட மிகவும் கொடூரமாகவும் வருந்தத் தக்கதாகவும் இருக்கின்றது. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் மாறி மாறி வருகின்ற சிங்கள ஆட் சியாளர்கள் இதனை கண்டு கொள் வதில்லை. இதை நிறுத்த வேண்டும் இதற்கு உடனடியாக தடை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். எங்களது இனம் தமிழினம் இந்த திருநாட் டிலே தலை நிமிர்ந்து வாழ்வதற்குஒரு வழி சமைக்க வேண்டும். என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.