;
Athirady Tamil News

பணமழையில் நனையப் போகும் இந்திய கிரிக்கெட் வாரியம் – எதிர்பார்க்கும் வரிச்சலுகை கிடைக்குமா?

0

கிரிக்கெட்டை பொறுத்தவரை சமீப நாட்களில் சுவாரஸ்யமான ஆஷஸ் தொடர் குறித்தும் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடி வருவது குறித்தும் பேசப்படுகிறது.

இத்தனைக்கும் நடுவில் வரவுள்ள மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வெல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆனால், உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு மிக அதிகமாகவே இருப்பதாகக் கருதப்படுகிறது.

உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதிக்கம் உலகம் முழுவதும் தொடரும் என்பது இந்த மாதம் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் உறுதியாகியுள்ளது.

ஐசிசியின் ஆண்டு வருமானத்தில் 38.5 சதவீத பங்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அளிக்கப்படும் என்று இந்த மாதம் டர்பனில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவாகியுள்ளது.

இந்தத் தொகை சுமார் 231 மில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 2,000 கோடி ரூபாய்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசன், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் சேர்த்து இந்தப் பங்கை கோரியிருந்தார்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசன், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் சேர்த்து இந்தப் பங்கை கோரியிருந்தார்.

அந்த அடிப்படையில், மூன்று நாடுகளுக்கும் கோரப்பட்ட பங்குக்கு நிகரான தொகை தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் மட்டும் கிடைக்கிறது. இதன்மூலம் இந்தத் தொகை எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இந்த மாடல் செயல்படுத்தப்படவில்லை. ஆயினும் அவரது கோரிக்கையின் விளைவாக 2015 முதல் 2023 வரை, ஐசிசியின் வருமானத்தில் 22 சதவீத பங்கை பிசிசிஐ பெற்று வந்தது.

சஷாங்க் மனோகர் 2015இல் ஐசிசியின் தலைவரானபோது, பணக்கார வாரியம் மேலும் பணக்காரராகும், ஏழையாக இருக்கும் வாரியம் மேலும் ஏழையாகும் என்று கூறி, மூன்று நாடுகளுக்கும் அதிக வருமானம் தரும் மாடலை திரும்பப் பெற்றார்.

மற்ற உறுப்பு நாடுகளுக்கு எந்த விதமான பங்கு கிடைக்கும் என்பதை ஐசிசியின் புதிய மாற்றம் குறிப்பிடவில்லை. ஆனால் உறுப்பு நாடு ஒவ்வொன்றும் முன்பைவிட அதிக பணத்தைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்போது பிசிசிஐக்கு 38.5 சதவிகித பங்கு கிடைக்கும். இது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் பெறும் 41 மில்லியன் டாலர்களைவிட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகம்.

ஆஷஸில் பரபரப்பான கிரிக்கெட்டை விளையாடும் அணியின் வாரியம் ஐசிசியின் 6.89 சதவிகித்த பங்குடன் இரண்டாவது இடத்தில் உள்ளது

ஆஷஸில் பரபரப்பான கிரிக்கெட்டை விளையாடும் அணியின் வாரியம் ஐசிசியின் 6.89 சதவிகித்த பங்குடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வாரியம் 6.25 சதவிகித பங்காக, 37.53 மில்லியன் டாலர்களை பெறும்.

அதாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள வாரியங்கள் சேர்ந்து பெறும் தொகையைவிட மூன்று மடங்கு அதிக தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் பெறவுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு 5.75 சதவிகிதம் அதாவது 34.5 மில்லியன் டாலர்கள் கிடைக்கும்.

இது தவிர, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய நாடுகள் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான தொகையுடன் திருப்தியடைய வேண்டியிருக்கும்.

மற்ற வாரியங்களுடன் ஒப்பிடும்போது பிசிசிஐயின் வருமானம் மிக அதிகமாக இருப்பதுபோலத் தோன்றினாலும் உண்மையில் அவ்வளவு வருமானம் இருக்காது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிசிசிஐக்கு இவ்வளவு பெரிய பங்கு எப்படி வருகிறது என்ற கேள்வி நிச்சயமாக எழும். இதற்கான பதில் அனைவரும் அறிந்ததே.

நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருமானத்தில் 70 முதல் 80 சதவிகிதம் இந்திய சந்தையில் இருந்து வருகிறது.

மற்ற வாரியங்களுடன் ஒப்பிடும்போது பிசிசிஐயின் வருமானம் மிக அதிகமாக இருப்பதுபோலத் தோன்றினாலும் உண்மையில் அவ்வளவு வருமானம் இருக்காது.

இதற்கு மிகப் பெரிய காரணம் ஐசிசி போட்டியின்போது பிசிசிஐ-க்கு அரசிடம் இருந்து எந்தவித வரிச் சலுகையும் கிடைப்பதில்லை.

ஐசிசியிடமிருந்து அதிக வருமானம் கிடைக்கும் ஆனால்…

பிசிசிஐ-க்கு 2023 உலகக்கோப்பையை நடத்துவது இந்திய அரசு வரிச்சலுகை அளிக்கவில்லை என்றால், வாரியத்திற்கு குறைந்தது 955 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று சௌரவ் கங்குலி தலைவராக இருந்தபோது வெளியான பிசிசிஐ மதிப்பீடு தெரிவிக்கிறது.

போட்டிகளின் ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீது 21.84 சதவீத வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

செளரவ் கங்குலி, ஜெய் ஷா இருவரும் இந்த முழு விஷயத்தையும் சரியான முறையில் கையாளவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது

இந்தியாவில் இருக்கும் வரி தொடர்பான சட்டங்களின்படி, எந்தவிதமான விலக்கும் அளிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக 2016 டி20 உலகக் கோப்பையின்போது கூட பிசிசிஐ, 193 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டியிருந்தது.

இந்த விவகாரம் ஐசிசி தீர்ப்பாயத்தில் இருப்பதாக பிசிசிஐ கூறி வருகிறது.

இருப்பினும் செளரவ் கங்குலி, ஜெய் ஷா இருவரும் இந்த முழு விஷயத்தையும் சரியான முறையில் கையாளவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இருவரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். பிசிசிஐ, நிகர லாபத்தின் மீது அல்லாமல் மொத்த வருமானத்தின் மீது வருமான வரி செலுத்த வேண்டும் என்று அரசு தெளிவுபடக் கூறிவிட்டது.

ஐசிசி போட்டியை நடத்தும் நாடு, அரசிடமிருந்து வரிச் சலுகையைப் பெறலாம் என்று ஐசிசி விதிகள் கூறுகின்றன. ஆனால் தற்போது இது குறித்து பிசிசிஐயில் தெளிவு எதுவும் காணப்படவில்லை.

ஆயினும் ஜெய் ஷா பிசிசிஐ செயலராக இருப்பதால் கடைசி நேரத்தில் ஏதாவது வழி பிறக்கும் என்றும் பிசிசிஐக்கு அதிக வரிச்சுமை ஏற்படாது என்றும் அனைவரும் நம்புகின்றனர்.

இனி எல்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத்தொகை கிடைக்கும்

வருமானப் பகிர்வைத் தவிர ஐசிசி கூட்டத்தில் மற்றொரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டது.

இனி எல்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத்தொகை கிடைக்கும்.

சர்வதேச போட்டிகளுக்கு ஒரே மாதிரியான மேட்ச் ஃபீஸை அமல்படுத்துவதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

இருப்பினும் அத்தகைய அறிவிப்புகளிலும் சில சிக்கல்கள் உள்ளன.

சர்வதேச அளவிலான போட்டிகளுக்கான கட்டணம் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் சமமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வீரர்களின் ஒப்பந்தங்களுக்கும், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளின் எண்ணிக்கைக்கும் இடையே இப்போதும் நிறைய இடைவெளி உள்ளது.

இருந்தபோதிலும் இந்த நடவடிக்கை, மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கெட்டில் சமத்துவத்தை நோக்கிய ஒரு பெரிய படியாக கருதப்படுகிறது.

இங்கிலாந்து 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றபோது, அவர்களுக்கு 28.4 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.

ரன்னர் அப் நியூஸிலாந்துக்கு 14.2 கோடி ரூபாய் கிடைத்தது.

மகளிர் உலகக் கோப்பையில் 2022ஆம் ஆண்டின் சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு சுமார் 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது. ரன்னர் அப் இங்கிலாந்து, 4.5 கோடி ரூபாய் பெற்றது.

ஆடவர் மற்றும் மகளிருக்கான எல்லா போட்டிகளின் பரிசுத் தொகையும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரே மாதிரியாக இருக்கும் என்று ஐசிசி கூறியுள்ளது.

இதுதவிர, உலகம் முழுவதும் நடைபெற உள்ள டி20 லீக் போட்டிகள் குறித்தும் ஐசிசி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கு எந்தவித தடையும் விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது

முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கு எந்தவித தடையும் விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ILT 20, MLC மற்றும் Canada Premier League போன்ற போட்டிகள் அடங்கும்.

இருப்பினும் அதிகரித்து வரும் டி20 லீக் போட்டிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, டி20 கிரிக்கெட்டின் முன்னணி வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக தத்தமது அணிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்காமல் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வோர் அணியும் தமது நாட்டில் இருந்தும் அஸோஸியேட் உறுப்பு நாடுகளில் இருந்தும் குறைந்தது ஏழு கிரிக்கெட் வீரர்களை களமிறக்க வேண்டும்.

இந்த நாட்களில் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செளதி அரேபியாவும் வரும் நாட்களில் இதுபோன்ற லீக்கை தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டை காப்பாற்றி வழிநடத்த ஐசிசி முயற்சி செய்கிறது.

ஆகவேதான் லீக் போட்டிகளை நடத்தும் வாரியம், வெளிநாட்டு வீரர்களின் உள்நாட்டு வாரியத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.