;
Athirady Tamil News

அதிபர் வேட்பாளர் கொலை எதிரொலி – ஈகுவடாரில் அவசர நிலை பிரகடனம்!!

0

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சியோவும் ஒருவர் ஆவார். பத்திரிக்கையாளரான அவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதிபர் தேர்தலில் களம் இறங்கிய பெர்னாண்டோ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தலைநகர் குயிட்டோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட பெர்னாண்டோ காரில் ஏறினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பெர்னாண்டோவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. மேலும் பெர்னாண்டோவின் பாதுகாவலர்கள் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து குற்றவாளியை கைது செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஈக்வடாரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்துக்கு அந்நாட்டின் அதிபர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். இந்நிலையில், அதிபர் கில்லர்மோ லாஸ்சோ கூறுகையில், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. சட்டத்தின் முழு பலமும் குற்றவாளி மீது காட்டப்படும். திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும். இதற்காக நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.