;
Athirady Tamil News

அதிபர் தேர்தல் நடத்தப்படும் காலம்: பந்துல குணவர்தன வெளியிட்ட தகவல்

0

தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு அறிவுறுத்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுச் சென்றவர்களில் சில அரச ஊழியர்களும் உள்ளதால், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்களது வேலைவாய்ப்பில் பிரச்சினைகள் காணப்படுவதாலும், ஏனைய விடயங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறு சட்டமா அதிபர் மற்றும் ஏனைய தரப்பினருடன் கலந்தாலோசித்து நேற்று அமைச்சரவையில் பிரதமருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மாகாண சபைத் தேர்தலை சர்ச்சைக்குரிய முறையின்றி நடத்தி அடுத்த வருடத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்குவது தொடர்பில் சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு அதிபர் பிரதமருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.