;
Athirady Tamil News

சந்திரயான்-3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23-ந்தேதி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்: பிரதமர் மோடி!!

0

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டிய பிரதமர் மோடி, தொடர்ந்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * இந்தியாவின் அடையாளத்தை நிலவில் பதித்ததன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இஸ்ரோ இடம் பிடித்துள்ளது. * இஸ்ரோவில் விஞ்ஞானிகள் என்னென்ன சாதனை படைத்துள்ளீர்களோ, அவை அனைத்தையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். * இந்தியாவின் அடையாளமான அசோக சின்னம் தற்போது நிலவில் பதிக்கப்பட்டுள்ளது. * விஞ்ஞான வரிசையில் 3வது இடத்தில் இருந்த இந்தியா “சந்திரயான்-3” வெற்றிக்கு பிறகு முதல் இடத்திற்கு வந்துள்ளது. * “சந்திரயான்-3” லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்.

* “சந்திரயான்-3” திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு ஒரு சாட்சி. * நிலவில் கால்பதித்த 4வது நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது. * விண்வெளி துறையின் சாதனைகள், பங்களிப்பு இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது. * “சந்திரயான்-2” கால்தடங்களை பதித்த நிலவின் மேற்பரப்பில் உள்ள இடம் ‘திரங்கா’ என்று அழைக்கப்படும். இது இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் உத்வேகமாக இருக்கும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நினைவுபடுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.