;
Athirady Tamil News

தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மம்! நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி

0

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மரணத்திற்கான காரணம்
பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவின் வேண்டுகோளுக்கமைய நீதிமன்ற அனுமதியுடன் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

தற்போது விசாரணைகள் முடிந்த நிலையில் மீண்டும் அவரது உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, உடலை தகனம் செய்வது பொருத்தமற்றது என்று பரிந்துரைத்துள்ளது.

மேலதிக விசாரணைகள்
இது தொடர்பாக விசாரணை செய்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியது.

அதன்படி, கொழும்பு ஜாவத்தை மயானத்தில் ஷாப்டரின் மனைவி வாங்கிய காணியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் நடத்தப்படவுள்ளது.

அன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவின் அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.