;
Athirady Tamil News

அரச ஊழியர்களுக்கென நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

0

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதால் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனாலேயே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி
”நாட்டின் மொத்த வருமானம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை எட்டக்கூடியதாக இருக்கிறது, நாட்டை கட்டியெழுப்ப பயணிக்க வேண்டிய வழியை அதிபர் தெரிவித்திருக்கிறார்.

அதன் பிரகாரம் செயற்பட்டு வருவதாலே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியும் எமக்கு கிடைக்க இருக்கிறது.

வங்குரோத்து அடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனாலே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அரச வருமானங்களை சேகரிக்கும் அதிகாரிகள் அதனை முறையாக செய்ய வேண்டும்.

ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள்
கடந்த காலங்களில் இந்த அதிகாரிகள் தங்களின் பொறுப்பை முறையாக செய்யத் தவறியதாலேயே அரச வருமானம் குறைவடைந்திருந்தது.

இந்த அதிகாரிகளின் மோசடிகளை நிறுத்த இவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் முறையாக செயற்படாத அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் தற்போது சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அரச வருமானம் சேகரிக்கும் அதிகாரிகளில் இருக்கும் ஊழல் மோசடிமிக்க அதிகாரிகளை கண்டுபிடிக்க வேண்டும். எதிர்வரும் ஜனவரி முதல் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.