;
Athirady Tamil News

புடின் ஒரு அரக்கன்: பகிரங்கமாக தெரிவித்த கனேடிய பிரதமர்

0

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம் தொடர்பில் தகவல் அறிந்த கனேடிய பிரதமர் விளாடிமிர் புடின் ஒரு அரக்கன் என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி ரஷ்ய அதிபர் புடினையும் அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் ஒருவர் ஆவார்.

இந்நிலையில், அவர் நேற்றையதினம்(16) திடீர் என சிறையில் உயிரிழந்தார்.

புடின் ஒரு அரக்கன்
அவரின் திடீர் மரணம் தொடர்பில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அத்தோடு, நவல்னியின் மரணத்தை புடினே பொறுப்பேற்க வேண்டுமென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நவல்னியின் மரணச் செய்தியைக் கேட்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), புடினை ஒரு அரக்கன் (Monster) என்று அழைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நவல்னிக்கு அஞ்சலி
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “நவல்னியின் மரணம் ஒரு சோகம். ரஷ்ய மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடும் எவருக்கும் புடின் எவ்வளவு தூரம் நடவடிக்கை எடுப்பார் என்பதை இது காட்டுகிறது. நவல்னியின் மரணம் புடின் ஒரு அரக்கன் என்பதைக் காட்டுகிறது” என்று கூறியுளளார்.

அதேவேளை, மொஸ்கோவில் 10 நகரங்களில் இருந்து நவல்னிக்கு அஞ்சலி செலுத்த வந்த 100க்கும் மேற்பட்டோரை ரஷ்ய காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.