;
Athirady Tamil News

இலங்கையின் சிறந்த 10 பாடசாலைகளில் தேர்வான மூன்று வடக்கு பாடசாலைகள்!

0

நாடாளாவிய ரீதியில் சிறந்த 10 பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் திறைசேரியின் அங்கீகாரத்துடன் இலங்கையில் சிறந்த 10 பாடசாலைகளில் ஒன்றாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இந்த தரம் உயர்வின் மூலம் பாடசாலையின் அதிபராக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமனான எச். எல். ஈ. எஸ் தரம் ஒன்று உத்தியோகத்தர் காணப்படுவதோடு, பிரதி அதிபர்களாக மூவர் எஸ்எல்ஈஎஸ் தரம் மூன்று உத்தியோகத்தர்களும் கடமையாற்றுவார்கள்.

வடக்கு மாகாணத்திலேயே பிரதி அதிபர் பதவிக்கு 3 எஸ்எல்ஈஎஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளமை இந்த பாடசாலைக்கு மட்டுமே ஆகும்.

மேலும், வடக்கின் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து வேம்படி மகளிர் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி என்பனவும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.

இந்த தரம் உயர்வின் மூலம் பாடசாலையின் அதிபராக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமனான எச்எல்ஈஎஸ் தரம் ஒன்று உத்தியோகத்தர் காணப்படுவதோடு, பிரதி அதிபர்களாக இருவர் எஸ்எல்ஈஎஸ் தரம் 3 உத்தியோகத்தர்களும் கடமையாற்றுவார்கள் என தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.