;
Athirady Tamil News

உயர்தர வகுப்பு மாணவனின் உயிரை பறித்த தொலைபேசி கம்பம்

0

லுணுவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்மோதர – போலவத்த பிரதான வீதியில் பெஸ்டஸ் பெரேரா மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹாவெவ, கொஸ்வாடிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
குறித்த மாணவன் சம்பவ தினத்தன்று லுணுவில பகுதியில் இருந்து பெஸ்டஸ் பெரேரா மாவத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவனை உடனடியாக மாரவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் அந்த மாணவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் லுணுவில பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.