;
Athirady Tamil News

மருதடியானின் சப்பரத வெள்ளோட்டம் நாளை புதன்கிழமை

0

யாழ்ப்பாணம் – மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நாளைய தினம் புதன்கிழமை மாலை 04 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனை தொடர்ந்து மாலை திருவிழா இடம்பெற்று ,இரவு 08.30 மணியளவில் சப்பரத ஸ்தபதியை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதன் போது ,சங்குவேலி – பழனி சிற்பாலய ஸ்தபதி ஆசாரி சரவணபவன் அருளகனுக்கு “விஸ்வகர்ம வித்தகன்” எனும் சிறப்பு பட்டம் வழங்கி வைக்கப்படவுள்ளது.

ஆலய தர்மகர்த்தா சபை செயலாளர் து. பிரதீபன் தலைமையில் இடம்பெறவுள்ள கௌரவிப்பு நிகழ்வில் , ஆசியுரையை தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ நாகேந்திர திவாகரக் குருக்களும் , வாழ்த்துரையை யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ஈ. குமரனும் , பாராட்டு உரைகளை, சிவபூமி அறக்கட்டளை தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனும் ,கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் செந்தமிழ் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனும் வழங்கவுள்ளனர்.

எதிர்வரும் 14ஆம் திகதி தேர் திருவிழா இடம்பெறவுள்ளது. தேர் திருவிழா அன்று காலை 10 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகும்.

வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள்வீதி உள்ள வரும் மருதடி விநாயக பெருமான் மதியம் 12 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்குவார்.

தொடர்ந்து தேர் உற்சவம் நடைபெற்று ,மாலை 3 மணிக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.