பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது – அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!
பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறையு செய்து தரப்படும் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் கோரிக்கையான பேருந்து நிலையம், தபாலகம், மீன் சந்தை, ஆயுவேத வைத்திய நிலையம் உள்ளிட்ட மக்களது அவசிய தேவைகள் அடங்கிய வளாகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்காகவும்
தெரிவித்துள்ளார்.
பேசாலை வெற்றி மாதா ஆலயத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்பட்டதாகவே செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்பதாக இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் குறித்த பகுதி மக்களது வேண்டுகோளுக்கிணைய அமைவிடம் தொடர்பில் நேரில் ஆராய்ந்துகொண்டார்.
குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.
இன்நிலையில் மன்னார் நகருக்கு வருகை தந்த அமைச்சர் முதலில் பேசாலை நகரப்பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் நவீன சந்தை தொகுதி தபால் நிலையம், அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து கொண்டார்.
குறிப்பாக பேசாலை நகர் மத்தியிலுள்ள கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணியில் பேருந்து நிலையம், சந்தை தொகுதிதை, தபால் நிலையம், ஆய்ர்வேத வைத்தியசலை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து ஆராயுமாறு துறைசார் தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.