;
Athirady Tamil News

அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி: அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

0

தற்போது உலகில் வேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக ரூபா (Rs) மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம், உலகின் ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல் நான்கு மாதங்களில், அமெரிக்க டாலருக்கு (US dollar) எதிராக ரூபாய் 9.1% உயர்ந்துள்ளது மற்றும் யூரோவிற்கு(Euro) எதிராக 12.7% அதிகரித்துள்ளது.

ரூபாயின் பெறுமதி
அத்தோடு, ஸ்டெர்லிங் பவுண்டிற்கு (Sterling pound) எதிராக ரூபாயின் பெறுமதி 10.8% மற்றும் சீன யுவானுக்(Chinese Yuan)கு எதிராக 11.4% அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

ஜப்பானிய யென் (Japanese yen) உடன் ஒப்பிடும்போது ரூபாயின் பெறுமதி 21% ஆகவும் இந்திய ரூபாயுடன் (Indian rupees) ஒப்பிடுகையில் 9.5% ஆகவும் அவுஸ்திரேலிய டொலருடன் (Australian Dollar) ஒப்பிடுகையில் 14.2% ஆகவும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.