;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1712417.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

கனடாவில் துப்பாக்கிச் சூடு : காவல்துறை விசாரணை

0

கனடாவின் (Canada) மார்க்கம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அதிகாலை வேளையில் மார்க்கம் குடியிருப்புத் தொகுதியொன்றில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறை விசாரணை
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற வீட்டிற்கு எதிரில் உள்ள பாதையில் வெற்று தோட்டாக்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வாகமொன்று சம்பவத்தில் நின்றதாகவும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வீட்டில் சிலர் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.