;
Athirady Tamil News

இனி செல்ல பிராணிகளுக்கும் துணை தேடலாம்! மேட்ரிமோனி வலைதளம் உருவாக்கிய கேரள மாணவர்

0

செல்ல பிராணிகளுக்கு துணை தேட உதவியாக கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலை மாணவர் பிரத்யேக வலைதளத்தை உருவாக்கியுள்ளார்.

செல்ல பிராணிகளுக்கு இணையதளம்
கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (கேவிஏஎஸ்யு) மாணவர் அபின் ஜாய்.

இவர், செல்ல பிராணிகளுக்கு துணை தேட உதவியாக புதுமையான முயற்சியை முன்னெடுத்து பிரத்யேக வலைதளத்தை (vet-igo.in) உருவாக்கியுள்ளார்.

இந்த வலைதளமானது நாய்களுக்கான துணைகளை கண்டறிவதற்கு மட்டுமே செயல்படுகிறது. நாளடைவில் பூனைகள் போன்ற பிற செல்லப்பிராணிகளின் துணையை கண்டறியவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அபின் ஜாய் கூறியுள்ளார்.

இதையடுத்து, இந்த வலைதளமானது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வலைதளம் வாயிலாக கால்நடை ஆலோசனைகளும் வழங்கப்படும்.

கேரளா மற்றும் பிற மாநிலங்களில் செல்லப்பிராணிகளுக்கான முதல் ஆன்லைன் ‘மேட்ரிமோனி வலைதளம்’ என்று அபின் ஜாய் கூறியுள்ளார்.

இந்த ‘vet-igo.in’ வலைதளமானது செல்லப்பிராணிகளின் சுயவிவரங்களையும், படங்களையும் வழங்குவதால் சரியான துணையைத் தேர்ந்தெடுப்பதை மிகவும் எளிதாக்குகிறது.

இந்த முயற்சியில் மாணவருக்கு வழிகாட்டியாக கேவிஏஎஸ்யு டெக்னாலஜி பிசினஸ் இன்குபேஷன் சென்டரின் உதவி பேராசிரியர் டாக்டர் தீபா ஆனந்த் இருந்துள்ளார்.

தற்போது, இந்த வலைதளமானது இலவசமாக செயல்படும். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.