;
Athirady Tamil News

ஆசிய நோடொன்றில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள்

0

கிர்கிஸ்தான் நாட்டில் இளைஞர்கள் குழு ஒன்று வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கிர்கிஸ்தான் இளைஞர்கள்
நிலைமை கட்டுக்குள் வந்த பின்னர், கிர்கிஸ்தான் திரும்ப முடிவு செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில ஆசிய நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மே 17ம் திகதி அதிகாலையில் தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள விடுதிக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான கிர்கிஸ்தான் இளைஞர்கள் வெளிநாட்டு மாணவர்களைத் தாக்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு பல கிர்கிஸ்தான் ஆண்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பொலிசார் சம்பவயிடத்தில் இருந்த போதும் அவர்களால் வன்முறையை தடுக்க முடியாமல் போனது என்றே கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் சில பெண்கள் உட்பட பல மாணவர்களை அடித்துத் தாக்கினர். இப்படியான சம்பவம் முதல் முறையென குறிப்பிட்டுள்ள மாணவர் ஒருவர், உள்ளூர் மக்களை தூண்டிவிடும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து முறையான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றார்.

தாக்குதல்தாரிகள் கைதாகியுள்ளனர்.
இதனிடையே, பாக்கிஸ்தான் அரசாங்கம் பிஷ்கெக்கிலிருந்து தினமும் புறப்படும் கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது மற்றும் பல மாணவர்கள் குறைந்தபட்சம் தற்காலிகமாக வீடு திரும்புவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிர்கிஸ்தானில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகள் கடந்த சில தசாப்தங்களாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சில ஆசிய மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களிடையே பிரபலமாகி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் மலிவான கட்டணம், விலைவாசி உயர்வும் குறைவு. இதனிடையே வன்முறை சம்பவத்தை அடுத்து, கிர்கிஸ்தான் அரசாங்கம் மாணவர்கள் தலைவர்களுடன் பேசத்தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 10க்கும் மேற்பட்ட தாக்குதல்தாரிகள் கைதாகியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.