;
Athirady Tamil News

தாயுடன் உறங்கிய குழந்தை உயிரிழப்பு; பொலிஸார் குழப்பம்

0

மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் வீடொன்றில் தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிறந்து ஒன்றரை மாதமேயான குழந்தை கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தாய்ப்பால் அருந்திவிட்டு தாயுடனே உறங்கியுள்ளது.

உடல்கூறுகள் பகுப்பாய்வு

மறுநாள் (17) அதிகாலை குழந்தைக்கு பால் புகட்டுவதற்காக தாய் குழந்தையை எழுப்பியபோது குழந்தை சுவாசமின்றி இருந்துள்ளது.

அதனையடுத்து, உடனடியாக குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தை முன்னரே இறந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு சென்று மரண விசாரனைகளில் ஈடுபட்டு, குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்தார்.

அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாததால், சடலத்தின் உடல்கூறுகள் மேலதிக பரிசோதனைக்காக பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குழந்தையின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.