;
Athirady Tamil News

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவிகளின் ஆக்கத்திறன் கண்காட்சி

0

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி நேற்று(19.02.2025) புதன்கிழமை நடைபெற்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் அவர்கள் அவர்களின் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெற்றது.

பிரதம விருந்தினராக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சி .உமாபாலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கிராம/மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாச தலைவர் செ.நாகசெல்வம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து ஆடை வடிவமைத்தல், அழகுக் கலை, மனைப்பொருளியல் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது பயிற்சி பெற்ற மாணவிகளின் ஆடைகள், கேக் வகைகள், உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், பயிற்சிகளை நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயிற்சிகளை நிறைவு செய்த மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.