உழவு இயந்திரம் கவிழ்ந்து இளம் இராணுவ வீரர் பலி
இராவணா கொட பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இராணுவ வீரர் ஒருவர் நேற்று (20) உயிரிழந்துள்ளார்.
இராவணா கொட பகுதியைச் சேர்ந்த இராவணா கொட விஜயபாகு முகாமில் பணியாற்றிய கொட்டாஹேன பிட்டிய ஜயந்த ஜனித் ஹேரத் (வயது29) இராணுவ வீரரரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விடுமுறை நிமித்தம் தனது வீட்டுக்கு வந்த குறித்த இராணுவ வீரர் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.