;
Athirady Tamil News

வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது என புதிய கூட்டை கடுமையாக சாடிய சுமந்திரன்

0

ஒரு தனிக்கட்சியை வீழ்த்துவதற்கு கண்டவர்களையும் தங்களுடன் சேர்த்து அணியாக தம்மை காட்டி கொள்பவர்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது என தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் கொடுத்த ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தை கோரும் அரசியல் கட்சி எமக்கு மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் அதனால் எமக்கு குறுக்காக எவரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

பலருடன் அணி சேர்ந்து விட்டு , உங்களை விட நாங்கள் கூட என கூறும் பம்மாத்து வேலைகளை எங்களுக்கு காட்ட கூடாது. அவர்களாக தான் சொன்னார்கள் , அதிக ஆசனம் பெற்றவர்களுக்கு சபைகளை கொடுக்கிறோம் என

அதிலும் குறிப்பாக கட்சி என ஒருமையில் சொன்னவர்கள் தற்போது கட்சி என்ற சொல்லை விட்டு அணி என இருக்கிற உதிரிகளை சேர்ந்து வைத்துள்ளார்கள். மக்கள் அப்படி தீர்ப்பு கொடுக்கவில்லையே.

அந்த அணியை ஊடகவியலாளர்கள் படம் எடுக்க கஷ்ரப்பட்டு இருப்பார்கள் அந்த அளவு நீட்டுக்கு ஆட்கள் நிற்கின்றார்கள் அவ்வளவு பேரும் சேர்ந்து நின்று சவால் விடுகின்றார்களாம்

ஒரு தனிக்கட்சியை விழுத்துவதற்கு அணி என சொல்லி வருவதற்கு வெக்கம், மானம் ரோசம் எதுவும் அவர்களுக்கு இல்லை இவர்கள் மக்கள் ஆணையை மீறுகின்றவர்கள்

இருட்டில் போய் சந்திக்கிறது. பிடிபட்டவுடன் இல்லை இல்லை நாங்கள் சந்திக்கவில்லை என பொய் கூறுவது கண்டவர்களை எல்லாம் அணி சேர்ந்து தமிழரசை வீழ்த்துகிறோம் என சொல்கிறார்கள்.

ஆனாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளிலும் தமிழரசு கட்சியே ஆட்சி அமைக்கும் என்பதனை உறுதியாக சொல்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.