35,000 அடி உயரத்தில் நடுவானில் பிறந்த குழந்தை
இந்தியாவில் மும்பை நோக்கி பறந்த விமானத்தில் பெண்ணொருவர் ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார்.
நடுவானில் பறந்தபோது
தாய்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்தார்.
மஸ்கட்டில் இருந்து மும்பை நோக்கி சென்ற அந்த விமானம், நடுவானில் பறந்தபோது குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எச்சரிக்கை எழுப்பப்பட கேபின் குழுவினர் உடனடியாக நடவடிக்கைக்கு வந்தனர். மேலும், விமானி மூலம் மும்பை விமான நிலைய கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஆண் குழந்தை
பின்னர் செவிலியர் ஒருவரின் உதவியுடன் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.
இதனைத் தொடர்ந்து, மும்பையில் விமானம் தரையிறங்கியவுடன் தாய், சேய் இருவரும் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது மும்பையில் உள்ள தாய்லாந்தின் துணைத் தூதரகத்துடன் இணைந்து, வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்கு தாய்க்கு உதவுகிறது.
