;
Athirady Tamil News

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்! அலஸ்காவில் சந்தித்துக் கொண்ட டிரம்ப்-புடின்: வீடியோ

0

உலகின் இரண்டு பெரிய தலைவர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் அலஸ்காவில் சந்தித்துக் கொண்டனர்.

டிரம்ப்-புடின் சந்திப்பு
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அலஸ்காவில் இன்று சந்தித்தார்.

தனி விமானங்கள் மூலம் அலஸ்காவில் உள்ள எல்மெண்டார்ஃப்-ரிச்சர்ட்சன் ராணுவ தளத்திற்கு வந்திறங்கிய இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கைகுலுக்கி கொண்டனர்.

ரஷ்ய ஜனாதிபதி புடின் சிவப்பு கம்பள விரிப்பில் நடந்து வரும் போது, அமெரிக்க ஜனாதிபதி புன்னகையுடன் கைதட்டி வரவேற்றார்.

உலகின் இரண்டு பெரிய தலைவர்களின் இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.