;
Athirady Tamil News

இனிய பாரதியின் சகா 7 மணி நேர விசாரணையின் பின் விடுவிப்பு

0

சிஜடி யினரால் 25ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இனிய பாரதியின் சகாவான மட்டு களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை சுமார் 7 மணித்தியால விசாரணையின் பின்னர் சிஐடியினர் விடுதலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இனிய பாரதியின் சகாவாக செயற்பட்டிருந்த குறித்த நபரை சம்பவ தினமான திங்கட்கிழமை (25) பகல் களுவங்கேணியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து சென்ற சிஜடி யினர் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரை கொண்டு சென்று சுமார் 7 மணித்தியால தொடர் விசாரணையின் பின்னர் இரவு 9.00 மணிக்கு விடுவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.