;
Athirady Tamil News

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்

0

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (30) திடீரென உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வட்டுக்கோட்டை – கலட்டி பகுதியைச் சேர்ந்த நடராசா ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

குடும்பஸ்தர் நேற்று காலை உடல் சுகயீனம் காரணமாக படுத்திருந்த நிலையில் அவர் அசைவற்று காணப்பட்டதால் குடும்பத்தினர் அவரை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.