;
Athirady Tamil News

நாட்டில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்; பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பகீர் தகவல்

0

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

மேலும் அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.