;
Athirady Tamil News

லண்டனில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவு எழுச்சி நிகழ்வு

0

லண்டன், செப்டம்பர் 26, 2025 – தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில், தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 38-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எழுச்சி நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.

இந்நிகழ்வு இன்று அதிகாலை 11 மணி முதல் மாலை 5:00 மணி வரை உணவு தவிர்ப்பு விழிப்புணர்வு போராட்டமாக நடைபெற்றது. இதில் பெருமளவு தமிழர் சமூகத்தினர், இளைஞர்கள், பெண்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டு திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தனர்.

போராட்டத்தின் தொடக்கத்தில் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறும், தமிழர் உரிமைக்கான கோரிக்கைகளும் வலியுறுத்தும் வகையில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

உரையாற்றியவர்கள், “தியாக தீபம் திலீபன் தமிழர் உரிமைக்காக உயிர்தியாகம் செய்தார்; அவரது இலட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை” என்று வலியுறுத்தினர். மேலும், தமிழர் அரசியல் உரிமைகள் மற்றும் தன்னாட்சி கோரிக்கைகள் நிறைவேறும்வரை இப்படியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். பங்கேற்ற பொதுமக்கள் அனைவரும் திலீபனின் தியாகம் இன்றும் தமிழர் போராட்ட வரலாற்றில் தீபமாக எரிந்து கொண்டிருப்பதை நினைவுபடுத்திக் கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.