டெஸ்லா நிறுவனத்தின் முதல் பறக்கும் கார் ; மஸ்க் கொடுத்த அசத்தலான அப்டேட்
இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் மகிழுந்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மஸ்க் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இது வரலாற்றிலேயே மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் மகிழுந்தை வெளியிட விரும்புவதாகவும், இருப்பினும் இந்த காலக்கெடு தற்காலிகமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.