வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி; மனைவி சடலமாக மீட்பு
வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் நேற்று (17) வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, கணவன் காணாமல் போயுள்ளார்.
வெலிமடை பிரதேசத்தில் பெய்த அதிக மழை காரணமாக தம்பதியினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ன
நேற்று இரவு முழுவதும் இருவரையும் தேடும் பணிகளில் அப் பகுதி மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் 32 வயதுடையவர் என்றும் காணாமல் போன கணவர் 37 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் காணாமல் போன கணவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.