;
Athirady Tamil News

யாழில் நான்கு இளைஞர்கள் அதிரடி கைது

0

யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 4 பேர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

மேலதிக விசாரணை
கைதானவர்கள் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 22,24 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் இன்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.