219 குடும்பங்களைச் சேர்ந்த 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு இன்று மாலை 4.30 மணி வரை கிடைத்த சேத விபரங்களின் நிலவரமே இதுவாகும்.
இதன்போது ஒரு வீடு முழுவதுமாக சேதமடைந்ததுடன் 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.