காரைநகரில் வாழ்வாதாரம் குறைந்த மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்
காரைநகரில் வாழ்வாதாரம் குறைந்த மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்
இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தீவக இணைப்பாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்திகளான திரு ,திருமதி் தர்சன் காரின் அவரது தாயார் சக்தி திருமதி மனோரஞ்சிதம் கணேஸ் ஆகியோரின் நிதியுதவியில்
யாழ் மாவட்டம் காரைநகர் பாலக்காடு இராயேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் சுவிஸ் நாட்டு கிளையின் நிறுவுனர் சக்தி செல்வரத்தினம் சுரேஷ் அவர்களின் நெறிப்படுத்தலில் 2021 ம் ஆண்டிலிருந்து ஆறாவது தடவையாக மேற்படி செயற்திட்டம் காரைநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
