;
Athirady Tamil News

அரபிக் கடலில் தத்தளித்த கப்பல் ; 18 கடற்றொழிலாளர்களுக்கு நடந்தது என்ன

0

வடக்கு அரபிக்கடலில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 18 கடற்றொழிலாளர்களைப் பாகிஸ்தான் கடற்படையினர் அதிரடியாகப் போராடி மீட்டுள்ளனர்.

வடக்கு அரபிக்கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ‘கோல்ட் ஆட்டம்’ (Gold Atom) என்ற வர்த்தகக் கப்பல், திடீரென தொழில்நுட்பக் கோளாறு அல்லது விபத்து காரணமாக நடுக்கடலில் தத்தளித்துள்ளது.

அங்கிருந்து விடுக்கப்பட்ட அவசர ‘ஆபத்து அழைப்பை’ (Distress Call) அடுத்து பாகிஸ்தான் கடற்படை மீட்புப் பணியில் இறங்கியது.

இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட 18 கடற்றொழிலாளர்களும் ஆசியாவின் சீனா , பங்களாதேஷ், மியான்மர், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களும் உடனடியாக பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் மீண்டும் தத்தமது நாடுகளுக்குத் திரும்புவதற்கான தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.