;
Athirady Tamil News

பாகிஸ்தானில் துவங்கியது அமைதி பேச்சு: ஈரான் தோல்வியடைந்த நாடு என டிரம்ப் விமர்சனம்

0

வாஷிங்டன்:

மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இதனிடையே, ஈரானை “தோல்வியடைந்த நாடு” என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை அண்டை நாடான பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

இதற்காக இரு தரப்பு குழுவினரும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள நூர் கான் விமான நிலையத்திற்கு தனித்தனியாக வந்தடைந்தனர். அமெரிக்கா சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காப் உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோர் ஈரான் குழுவில் பங்கேற்றனர். அவர்களை பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் வரவேற்றார். பின்னர் இரு தரப்பினரும் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேசினர்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது. திட்டமிட்ட நேரத்தை விட 5 மணி நேரம் தாமதமாக தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனிடையே, டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு. அதன் ராணுவம், கடற்படை, விமானப்படை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்காக இதை செய்கிறோம். அவர்கள் தாங்களாக இதை செய்ய விருப்பம் காட்டவில்லை. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறாவிட்டால் மீண்டும் தாக்குதல் தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.