;
Athirady Tamil News

யாழில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன் ; ஒரே இரவில் அதிரடி காட்டிய பொலிஸார்

0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன், மற்றைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

மேலதிக விசாரணை
இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் பிரதான சந்தேகநபரான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் உட்பட நால்வரையும் வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.