;
Athirady Tamil News

போர்க் கப்பல்களில் இருந்து ஏவுகணை சோதனை: வட கொரிய ஜனாதிபதி கின் ஜாங் நேரில் ஆய்வு

0

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் பணியினை ஆய்வு நேரில் ஆய்வு செய்தார்.

ஏவுகணை சோதனை
ஞாயிற்றுக்கிழமை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அந்நாட்டின் சோய் ஹியோன் போர்க்கப்பலின் செயல்பாட்டு திறன் சோதனைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது போர்க் கப்பல்களில் இருந்து ஏவப்படும் குரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் போர்க் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனைகள் ஆகியவற்றை ஜனாதிபதி கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படை தளபதிகளுடன் இணைந்து இந்த சோதனையை அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் பார்வையிட்டதாக அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

KCNA வெளியிட்ட செய்தியின் படி, போர்க்கப்பல்களின் ஆயுத கமாண்ட் தொகுப்பை சோதிக்கவும், ஏவுகணை ஏவுதலில் இராணுவ குழுவினருக்கு பயிற்சி அளிக்கவும் 2 குரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் 3 போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் நேவிகேஷன் சிஸ்டம்களின் துல்லியத்தன்மை மற்றும் ஜாமிங் எதிர்ப்பு ஆகியவையும் சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூஸ் ஏவுகணைகள் 7,869 வினாடிகள் முதல் 7920 வினாடிகள் வரையும், போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் 1,960 வினாடிகள் முதல் 1973 வினாடிகள் வரையிலும் பறந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.