;
Athirady Tamil News

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்; 5 அரபு நாடுகளிடம் இழப்பீடு கேட்கும் ஈரான்

0

தெஹ்ரான்

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடுமையான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து நடந்து வந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், 40 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் சற்று தணிந்தது. இதனையடுத்து, பாகிஸ்தானில் அமெரிக்கா, ஈரான் தரப்புக்கு இடையே நடந்த முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

எனினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இந்த வாரத்தில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற கூடும் என்று பாகிஸ்தானிலுள்ள ஈரான் தூதரக அதிகாரி கூறியுள்ளார்.

இந்நிலையில், பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய 5 நாடுகளும், ஈரான் தங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என கோரியுள்ளன. இதுதொடர்பாக, ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜமால் பரேஸ் ஆல்ரோவெயி ஆகியோருக்கு ஈரானின் தூதர் மற்றும் நிரந்தர பிரதிநிதி அமீர்-சையது இரவானி கடிதம் எழுதியுள்ளார்.

அவர்களுடைய சர்வதேச ரீதியிலான தவறான செயல்களின் விளைவால் ஏற்பட்ட, ஈரானிலுள்ள அனைத்து பகுதிகளின் பாதிப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வ பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்குவது உள்பட ஈரானுக்கு முழு அளவிலான நஷ்ட ஈட்டை இந்த 5 நாடுகளும் வழங்க வேண்டும் என்றும் இரவானி வலியுறுத்தி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.