தேசிய அடையாள அட்டை விநியோகம் நாளை முதல் வழமைக்கு
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் சீர் செய்யப்பட்டதையடுத்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் நாளை (ஏப்ரல் 20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அடையாள அட்டை பெறுவதற்கான உடனடி’ஒரு நாள் சேவை’ (One Day Service) நாளை முதல் வழமை போன்று இயங்கும்.
திணைக்களத்தின் ஏனைய அனைத்து பொதுச் சேவைகளும் நாளை முதல் பொதுமக்களுக்குக் கிடைக்கும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக அடையாள அட்டை விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.