;
Athirady Tamil News

இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்

0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அறிவித்தார்.

இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

குறித்த இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டமும் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.