;
Athirady Tamil News

நைஜீரியா: பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பேர் பலி

0

மைதுகுரி

ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் சம்பீசா வன பகுதியில் புபாகு என்ற பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி கிராமத்தினர் கூறும்போது, உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்று புதைக்கப்பட்டு உள்ளன. போகோ ஹரம் குழுவை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் கிராமத்திற்குள் புகுந்து, மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய லகுரவா அமைப்பு மற்றும் கடத்தல், பணய தொகை கேட்டு மிரட்டல், சட்டவிரோத சுரங்க பணிகளில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஈடுபடும் கொள்ளை கும்பல்களின் தாக்கம் நைஜீரியாவில் அதிகரித்து காணப்படுகிறது என தகவல் தெரிவிக்கின்றது. இதனால், அவர்கள் அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை தாக்கி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.