;
Athirady Tamil News

ஈரான் போர் விவகாரம்: மகன் திருமணத்தில் கூட பங்கேற்பது கடினமாக உள்ளது – டிரம்ப் வேதனை

0

வாஷிங்டன்,

டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் (வயது 48). இவரது 2-வது திருமணம், பஹாமாசில் உள்ள ஒரு சிறிய தீவில் நடைபெற உள்ளது.

பாம் பீச் சமூகப் பிரபலமும் மாடலுமான பெட்டினா ஆண்டர்சனை டொனால்ட் டிரம்ப் ஜூனி யர் மணக்க உள்ளார். இந்த நிலையில் ஈரான் போர் விவகாரத்தால் மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினமாக உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஈரான் போர் காரணமாக மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதுகூட கடினமாக உள்ளது. நான் அங்கு செல்ல வேண்டும் என்று அவர்(மகன்) விரும்புகிறார். அதில் கலந்து கொள்ள நிச்சயம் முயற் சிப்பேன். அதேவேளையில் நான் எனது மகனிடம், இது எனக்குச் சரியான நேரமாக இல்லை. எனக்கு ஈரான் விவகாரம் என்று ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி வேறு சில முக்கியப் பணிகளும் உள்ளன என்று கூறினேன்.

இது நான் எவ்விதத்திலும் வெற்றிபெற முடியாத ஒரு சூழல். ஏனென்றால் நான் திருமணத்தில் கலந்து கொண்டால், கடுமையாக விமர்சிக்கப்படுவேன். கலந்துகொள்ளாவிட்டாலும் விமர்சனங்களுக்கு ஆளாவேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.